மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிக்கிறார். கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலை பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், காவிரி பிரச்சனையில் நீதிமன்றம் சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றார். காங்கிரசுடன் மத்தியில் நீண்ட காலம் கூட்டணியில் இருந்த திமுக, எந்தவொரு நலத்திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மணப்பாறையில் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார். தற்போது அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக தெரிவித்தார்.