அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்குமாறு, அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் நலன், உரிமையை மையப்படுத்தி அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.