அதிமுகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமமுக புகழேந்தி

டிடிவி தினகரனை நம்பிச் சென்றவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாக அமமுக அதிருப்தி நிர்வாகியான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை விமர்த்துப் பேசியதாக அமமுக நிர்வாகியான புகழேந்தி குறித்து வெளியான வீடியோவால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த புகழேந்தி இன்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, அதிமுகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் முதல்வரை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

Exit mobile version