தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில், 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
சோளிங்கர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி. சம்பத், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 545 ஓட்டுகள் பெற்று திமுக வேட்பாளர் அசோகனை தோற்கடித்தார். பாப்பிரெட்டிபட்டியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தசாமி, ஒரு லட்சத்து 810 ஓட்டுகள் பெற்று, திமுக வேட்பாளர் மணியை தோற்கடித்தார். நிலக்கோட்டையில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி, 91 ஆயிரத்து 77 ஓட்டுகள் பெற்று, திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியனைத் தோற்கடித்தார். இதேபோல் அரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் 85 ஆயிரத்து 820 ஓட்டுகள் பெற்று திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை தோற்கடித்தார். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நாகராஜன், 80 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் இலக்கியதாசனை வீழ்த்தினார். பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் 77 ஆயிரத்து 989 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் சம்பத்குமாரை தோற்கடித்தார். விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பன், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 949 ஓட்டுகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயக்குமாரை தோற்கடித்தார். சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கந்தசாமி ஒரு லட்சத்து 11 ஆயிரத்து919 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் பொங்களூர் பழனிசாமியை 9 ஆயிரத்து 336 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், 76 ஆயிரத்து 935 ஓட்டுகள் பெற்று திமுக வேட்பாளரான ஸ்ரீனிவாசனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.