இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. க்கள் இன்று பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ க்கள் 9 பேர் இன்று பதவியேற்க உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் 9 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் இன்று எம்.எல்.ஏ க்களாக பதவியேற்க உள்ளனர்.அரூர் சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி,நிலக்கோட்டை தேன் மொழி, மானாமதுரை நாகராஜன் ,சாத்தூர் ராஜவர்மன், பரமக்குடி சதன் பிரபாகர், சோளிங்கர் சம்பத், சூலூர் கந்தசாமி, விளாத்திகுளம் சின்னப்பன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றுக்கொள்கின்றனர். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால் 9 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Exit mobile version