அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றிபெறும்- எம்.ஆர். விஜயபாஸ்கர்

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான வலுவான கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றிபெறும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

கரூர் மாவட்டத்தில் 10 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான பூமி பூஜையை போகுவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அமராவதி ஆற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியினையும் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள் என்று கூறினார்.

Exit mobile version