அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் -சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழகத்தில் தாய்மார்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கியதாக கூறினார். சினிமாவில் இருந்து வருபவர்கள் காசுக்காக இதை விமர்சனம் செய்வதாக அப்போது குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறிய அவர், அதிமுக பற்றி தரம் தாழ்ந்து பேசுபவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version