நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா இல்லையா என்பது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
அரசு உரிய அளிக்க வேண்டுமென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக துணைநிற்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற அதிமுக எப்போதும் துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.