விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று கூடியதும், விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். இந்த சட்டமுன்வடிவை தொடக்க நிலையிலேயே கடுமையாக எதிர்ப்பதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் தெரிவித்தனர். பின்னர் அவையில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா கல்வித்துறைக்கு பல்வேறு புரட்சிகளை கொண்டுவந்தவர் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.