வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்-மதுசூதனன்

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, அவைத் தலைவர் மதுசூதனன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர், பெரம்பூர், பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் தலா 50லட்சம் செலவில் 10-புதிய மினி லாரிகள் மூலம் நாள்தோறும் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதிமுக சார்பில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் குடிநீர் விநியோக திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஆனால் திமுகவினர் பொய் பிரசாரம் செய்து வருவதாக குறிப்பிட்டார். தினகரன் கூடாரம் காலி வருவதாக தெரிவித்த அவர், உண்மையான அதிமுக யார் என்பதை தொண்டர்கள் உணர்ந்து விட்டதாக கூறினார்.

Exit mobile version