திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் அதிமுக அரசு

மதுரையில், அழகிரியின் அதிகார லாபத்திற்காக கட்டப்பட்ட தரமற்ற மேம்பாலத்தை மக்கள் நலன்கருதி 

சீரமைக்கும் பணிகளை அதிமுக அரசு மேற்கொண்டுள்ளது..

கடந்த 2007 ம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில், மதுரை பழகாநத்தம் முதல் டிவிஎஸ் நகர் வரை
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு என்று கூறி பாலம் ஒன்று கட்டப்பட்டது. அப்போது மு.க. அழகிரி மத்திய அமைச்சராக இருந்தார்.

அந்த பாலத்தை மு.க.அழகிரி தமது சொந்த பயன்பாட்டுக்கென்றே கட்டியதாக அப்போதே புகார் எழுந்தது. அதற்கேற்றவாறு, அந்த பாலம் சரியாக இவர் வீட்டு அருகில் தான் முடிவடையும். அப்பாலத்தில், வெறும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வது போல கட்டியுள்ளனர்.

அழகிரி கொடுத்த நெருக்கடி காரணமாக அப்பாலம் பெரிய அளவிலும் கட்டப்படாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்நிலையில் தற்போது அந்த பாலம் சீர்குலைந்து போய் இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் நேரிடுகிறது.

இப்பாலத்தை சீரமைத்து கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அப்பாலத்தில் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் மின்விளக்கு அமைப்பது, வேகத்தடைகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு திமுகவின் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version