கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவு

கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் கர்நாடகா,கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு அந்தந்த மாநிலங்களில் உள்ள பாஜக கேட்டுக்கொண்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்ட 3 மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறு தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version