2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும்: அமைச்சர் ஜெயக்குமார்

2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுவதையொட்டி, அமைச்சர்கள் ஜெயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் நாடித் துடிப்பை அறிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழகம் என்றும் முன்னோடியாக இருப்பதாக கூறிய அமைச்சர், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிராய்லர் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று அமைச்சர் மீண்டும் கூறினார்.

Exit mobile version