அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாஜக – 5 தொகுதிகளிலும், பாமக – 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை, சென்னை கிரவுன்பிளாஸாவில் நடந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக்கட்சித்தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர்.