மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், அதில் எந்த ஒரு குறையும் கூறக்கூடாது என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உணர்வுப்பூர்வமான விஷயங்களில் மத்திய அரசு அவசரம் காட்டுவதாக கூறினார். மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், அதில் எந்த ஒரு குறையும் கூறக்கூடாது என தெரிவித்தார்.
அதிமுக கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று கூறிய அவர், தினகரனை மட்டும் ஒருபோதும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள முடியாது என்றார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் நிவாரணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post