சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடைகோரி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றனர். பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு காரணமாக 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி சபாநாயகர் தனபாலை சந்தித்து அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் மனு அளித்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால், 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனை அடுத்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் 3 எம்.எல்.ஏ.க்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றனர். எம்எல்ஏ-க்கள் பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அண்மையில் சந்தித்தனர்.
அதனையடுத்து தற்போது 3 பேரும் சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றனர்.