அதிமுக அமைச்சர்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்

மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தலில் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வையார்குப்பம், வாக்குச்சாவடி மையத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்களித்து, ஜனநாயக்கடமையாற்றினார்.

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த அவர், தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது வாக்கை பதிவு செய்தார். மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று அமைச்சர் வேலுமணி தனது வாக்களித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயக கடைமையாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், காலை முதலே மக்கள் எழுச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் வந்து வக்களிப்பதாகவும், இதை பார்க்கும் போது, அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் எம்.எம். மகளிர் அரசு கலைக்கல்லூரியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளரிடம் பேசிய அவர், மக்களுக்கு அதிக நன்மைகள் செய்து உள்ள அதிமுக அரசு தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தனது சொந்த ஊரில் வாக்குப் பதிவு செய்தார். ஈரோடு மாவட்டம், வேலம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், வாக்கைப் பதிவு செய்தார்.

இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள மேலகுமாரமங்களம் வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்துடன் வந்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியத்த அவர் இதனை தெரிவித்தார்.

வேதாரண்யத்தை அடுத்த ஒரடியம்புலத்தில், அமைச்சர் ஒ.எஸ் மணியன் வாக்காளித்தார். வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறு அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 26வது வாக்குச்சாவடியில், முதல் வாக்கை பதிவு செய்ய, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் 7 மணிக்கு சென்றார். அப்போது வாக்களிக்கும் இயந்திரம் இயங்கவில்லை. உடனடியாக தேர்தல் அதிகாரிகள் இயந்திரத்தை சரி செய்தனர். வாக்குச்சாவடியில் 25 நிமிடம் காத்திருந்த பின்பு அமைச்சர் வாக்களித்தார். அமைச்சர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பள்ளியில் தனது செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மக்களவைத் பொதுத் தேர்தலிலும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

 

Exit mobile version