உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து இரண்டாவது நாளாக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து இரண்டாவது நாளாக 4 மாவட்ட நிர்வாகிகளுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அதிமுக ஆட்சி காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

வார்டு வரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Exit mobile version