ஆங்கில புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில், தமிழகம் வளம் பெறவும், தமிழர்கள் வாழ்வு பெறவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், நிறைந்த செல்வத்துடனும் வாழ 2020-ம் ஆண்டில் புதிய வாய்ப்புகள் பெருகிட பிரார்த்திப்பதாக வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என உறுதிமொழியை புத்தாண்டு செய்தியாக கூறிக் கொள்வதாக கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் குறிப்பிட்டுள்ளனர்.
நிர்வாகத் திறன், மக்கள் சேவையில் முதலிடம் பெற்ற மாநிலமாகப் பாராட்டப்பட்டு இருக்கும் தமிழகம், தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தைப் பெறும் வகையில் தொண்டர்களோடு தொண்டர்களாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் வாழ்த்து செய்தியில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் குறிப்பிட்டுள்ளனர்.