நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு மாவட்டங்களை அமைப்பு ரீதியாக பிரித்து அஇஅதிமுக தலைமை அறிவிப்பு!

அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களாக, வி.கருப்பசாமிபாண்டியன், திருப்பூர் சி.சிவசாமி, இசக்கி சுப்பையா, புத்திச்சந்திரன், T.ரத்தினவேல், வி.மருதராஜ், P.G.ராஜேந்திரன், திருத்தணி கோ. அரி, வாலாஜாபாத் பா. கணேசன், எஸ்.ஆசைமணி, ஏ.கே. சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.இ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், பாப்புலர் வி.முத்தையா, நடிகை விந்தியா ஆகியோரும், அ.இ.அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளராக வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.P.B.பரமசிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக T.K.M. சின்னையா, இணைச் செயலாளர்களாக ஆ. இளவரசன், ப.குமாரசாமி, தண்டரை கே. மனோகரன், துணைச் செயலாளராக கே.எஸ்.துரைமுருகன் ஆகியோர் நினமனம்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.க. ஜெ.ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக கே.சிங்காரம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளராக அ.மனோகரன், மகளிரணி இணைச் செயலாளராக கணிதா சம்பத், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக ஆர்.எம்.பாபுமுருகவேல், விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்களாக முருகமலை சின்னசாமி, ஓ.வி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும், மருத்துவ அணி இணைச் செயலாளராக வி.எஸ்.விஜய், தென்காசி தெற்கு மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளராக கே.ஆர்.பி. பிரபாகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக தொண்டர்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்வதாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version