பாஜக, பாமக கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்தது தொடர்பான அறிவிப்பை, அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பாஜக தரப்பில், அக்கட்சியின் தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர்கள்,சி.டி. ரவி. கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாமக தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியுடன், ஆலோசனை நடைபெற்றது. அதிமுக சார்பில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். இரு கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக தலைமை, இன்று முறையாக அறிவிப்பு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.