அதிமுகவை பொறுத்தவரை வாக்குகளுக்காக திட்டங்களை அறிவிக்காமல் மக்களுக்கான திட்டங்களை செய்து வருகிறது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
கோவை சிவானந்தா பகுதியில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறினார். சாமானிய எழை மக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனதற்கு காரணம் அண்ணாதான் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.