அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நியமனம்

தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களின் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து அஸ்பயர்.கே.சுவாமிநாதன், அவரது விருப்பத்தின் பேரில் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதேபோல், தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களின் பட்டியலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை மண்டல கட்டுப்பாட்டில் வட சென்னை, தென் சென்னை, சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 17 மாவட்டங்களும், கோவை மண்டல கட்டுப்பாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கடலூர்15 மாவட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

Exit mobile version