தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் அதிமுக மும்முரம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அறிவிப்புகளை முன்னதாக வெளியிட்டு முந்திக்கொண்டது அதிமுக. பாஜகவுக்கு 5 தொகுதிகள், பாமகவுக்கு 7 தொகுதிகள் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதி என கூட்டணி ஒப்பந்தம் மேற்கொண்டது. அதே சமயம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் அதிமுக முந்திக்கொண்டு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச்செயலாளர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன்,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்,செம்மலை,மனோஜ் பாண்டியன்,ரபி பெர்னார்ட் ஆகியோருடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். விவசாயிகள்,மாணவர்கள், பெண்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது

Exit mobile version