அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளது – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக ஆட்சியை அழித்துவிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியதற்கு மாறாக அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு 120 ஏழை ஜோடிகளுக்கு திருவாரூரில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மணமக்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 70 வகையான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஆட்சியை அழித்து விடுவேன் என்று தினகரன் கூறியதற்கு மாறாக அதிமுக ஆலமரம் போல் வளர்ந்துள்ளதாக கூறினார்.

Exit mobile version