அதிமுக அரசின் சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், இந்த ஆண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என, பொதுப்பணித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கை கொடுத்த பருவமழை, முறையாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றால் முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளது
சென்னையில் தினசரி ஒரு கோடி பேருக்கு தண்ணீர் வழங்க வேண்டிய பணியை, சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்கிறது
சென்னை நகரின் தண்ணீர் தேவைக்கு, புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் பெரும்பங்காற்றுகின்றன
3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவான பூண்டி ஏரியில் தற்போது 3,122 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவான புழல் ஏரியில் தற்போது 3,080 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3,325 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவான சோழவரம் ஏரியில் தற்போது 822 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த 4 முக்கிய ஏரிகளில், தற்போது 10.9 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது
கத்தரி வெயில் வாட்டி எடுத்தாலும், இந்தாண்டு இறுதிவரை சென்னையின் தாகத்தை தணிக்க முடியும் – பொதுப்பணித் துறை நம்பிக்கை