வரும் 20ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 20 ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ்   அனுப்பி வைக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
Exit mobile version