ஜனவரி 9-ல் அஇஅதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

ஜனவரி 9-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 8.50 மணிக்கு, அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் எனவும், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழோடு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும், பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version