ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும், வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version