ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்த ஸ்டாலின் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
– அதிமுக துணை கொறடா ரவி கண்டனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவினர் மீது வழக்குகள் போட்டு வரும் ஸ்டாலினால், ஒராயிரம் வழக்குகள் போட்டாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என, துணை கொறடா ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மூர் மற்றும் வாலாஜா மேற்கு கிழக்கு ஒன்றியங்களுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அதிமுக துணை கொறடாவுமான ரவி, உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், ஜனநாயக ரீதியாக உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்த திமுக அரசை, வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
மேலும், சர்வாதிகார திமுக ஆட்சிக்கு, வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும், அதிமுக துணை கொறடா திட்டவட்டமாக கூறினார்.