அனைத்து மகசூல் விவசாயிகள், குத்தகைதாரர்கள் நலச்சங்க கட்டடத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

தேனி மாவட்டம் போடியில், அனைத்து மகசூல் விவசாயிகள், குத்தகைதாரர்கள் நலச்சங்க கட்டடத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அனைத்து மகசூல் விவசாயிகள், குத்தகைதாரர்கள் நலச்சங்கத்தின் பழைய கட்டடம் பழுதடைந்த நிலையில், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்ட, பூமி பூஜை நடைபெற்றது.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பூமி பூஜையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கத்தினர், அதிமுகவினர், எம்ஜிஆர் மன்றத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version