அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்கிற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மனைவி உடலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது, அதிமுக கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்