சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உடனான அதிமுக ஆலோசனை கூட்டம்,சென்னையில் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள்,கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் சி.வி. சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், 234 தொகுதிகளையும் பலப்படுத்துவது குறித்தும், பூத் கமிட்டிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.