எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்காக வழங்கப்பட்ட தொகுதிகளில், எந்ததெந்த தொகுதிகளை யார் யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.