ஊரக உள்ளாட்சி தேர்தலில் 13 மாவட்டங்களை அதிமுக கைப்பற்றியது. மேலும் மீதமுள்ள மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ,746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.
முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வந்தது. இந்நிலையில் 13 மாவட்டங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. மேலும் மீதமுள்ள மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.