அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு : ஊடகவியலாளர்கள் கருத்து

சென்னை வண்டலூரில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறும் நிலையில் இக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பற்றிய ஊடகவியலாளர்களின் கருத்துக்களை பார்க்கலாம்.

சென்னை வண்டலூரில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறும் நிலையில் இக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பற்றிய ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி என்று பத்திரிகையாளர் மாலன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் திமுகவைத் தவிர மற்ற கட்சிகளுக்கு போதிய பலமில்லை என்றார். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வலுவான கட்சிகள் என்று குறிப்பிட்டார்.

முந்தைய தேர்தல் நிலவரங்களை பார்க்கும்போது அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருந்த போது தான் பா.ம.க கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றது என்றும், அதேபோல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்ததையும், அதிமுகவை விட்டு பிரிந்த பிறகு தேமுதிக மிகப் பெரிய வீழ்ச்சி கண்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மற்றொரு பத்திரிகையாளரான கோலாகல ஸ்ரீனிவாசன் கூறும்போது,தொகுதிப் பங்கீட்டை பொறுத்தவரை அதிமுக ராஜதந்திரமாக செயல்பட்டுள்ளதாகவும், வலுவான கூட்டணியால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்திருப்பதாகவும், இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வலுவான கூட்டணியால் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பீதியாகியுள்ளதை அவர்களின் பேச்சுக்களே வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மூத்த பத்திரிகையாளர்களும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளதை சுட்டிக் காட்டினர். இந்நிலையில் இன்று வண்டலூரில் நடக்கும் மாநாடு அந்த வெற்றிக்கு அச்சாரமிடும் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.

Exit mobile version