அதிமுக தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி பரபரப்பு தகவல்

சென்னை ஆர்.கே நகர் தேர்தலில், ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கனை வாக்காளர்களுக்கு வழங்கிய யோசனையை, டிடிவி தினகரனுக்கு கூறியது, திமுகவின் செந்தில் பாலாஜிதான் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில், கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை மற்றும் தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து நல்லாட்சி நடத்தி வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய புகழேந்தி, தன்னை தேர்ந்தெடுத்த ஆர்.கே நகர் மக்களுக்கு டிடிவி தினகரன் இதுவரை என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கன் யோசனையை டிடிவி தினகரனுக்கு கூறியது, தற்போது திமுகவின் செந்தில் பாலாஜிதான் என தெரிவித்தார்.

Exit mobile version