இந்தியா முழுக்க தமிழகத்தை தனிப்பெரும் மாநிலமாக காட்டுவது இடஒதுக்கீடு என்ற ஒற்றை வார்த்தைதான்.
வளர்ச்சியின் அடிநாதமான இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட கட்சி அதிமுகதான்.
இடஒதுக்கீட்டிற்காக என்னனென்ன பாடுபட்டிருக்கிறது அதிமுக? விளக்குகிறது சிறப்புத் தொகுப்பு….
இந்தியாவிலேயே அனைத்து வகைகளிலுமே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதற்கு என்ன காரணம் என்று முட்டிமோதி யோசித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் இறுதியில் கிடைக்கும் விடை, இடஒதுக்கீடு.
நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இடஒதுக்கீட்டுக் கொள்கையை வகுத்து மக்களின் வாழ்வாதாரத்தை காத்திருக்கிறது தமிழகம்.
அதிலும், இடஒதுக்கீட்டிற்கு பிரச்னைகள் வந்தபோதெல்லாம், களத்தில் உண்மைத் தளபதியாய் போரிட்டு வெற்றிக்கனியையும் பறித்து மக்கள் மனதில் இதயக்கனியாக இன்னமும் வலம் வந்துகொண்டிருப்பது அதிமுக மட்டுமே…
1971 ம் ஆண்டுவரை வரை, தமிழ்நாட்டின் மொத்த இட ஒதுக்கீடு 41%ஆக இருந்தது.
அதற்குப்பிறகுதான் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 49% ஆக உயர்ந்தது.
பின்னர் 1980 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50%ஆக்கியதன் மூலம், தமிழகத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 68%ஆக உயர்த்தினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
1989 ல், பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 1% இட ஒதுக்கீடு காரணமாக, தமிழகத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 69% ஆக உயர்ந்தது.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிணாம வளர்ச்சியடைந்துவந்த இடஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து வந்தது. கொஞ்சம் அதிர்ந்துபோனது தமிழகம்.
1992 ஆம் ஆண்டில், பிரிவு 16 (4) இன் கீழ் உள்ள மொத்த இட ஒதுக்கீடு, 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.
ஆனால், அதற்கெல்லாம் தமிழகம் ஒன்னும் துவண்டுவிடவில்லை…
காரணம் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தது புரட்சித்தலைவி. அதனால் தான் தப்பித்தது தமிழகமும் இடஒதுக்கீடும்…
தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவிகிதமாகவே தொடர, நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசிடம், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்க,
நவம்பர் 1993 இல், ஒரு சிறப்பு சட்டமன்ற அமர்வில், ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அரசு.
இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட கையோடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசியல்வாதிகளின் குழு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு விரைந்தது.
தமிழக அரசின் சட்டம், எந்த நீதிமன்றத்திலும் அதற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாத படி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் புரட்சித்தலைவி.
ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது, இது தமிழகத்திற்கான 69% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது.
இப்படி பல கட்டப் போரட்டங்களின் மூலம், யாருமே அசைக்ககூட முடியாத அளவுக்கு பெரியார் கண்ட சமூக நீதியை தமிழகத்தில் நிலைநாட்டியதன் காரணமாகத்தான் சமூகநீதிகாத்த வீராங்கனை என்ற பட்டத்தைப் பெற்றார் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
இப்போது தமிழகம் அனுபவித்து வரும் சமூகநீதிக்கான இப்படிப்பட்ட சட்டப்போராட்டங்களை அதிமுகதான் முழுமூச்சாக களத்தில் இறங்கி செயல்படுத்தியது என்றும் மக்களுக்கான ஓர் இயக்கமாக தன்னை முன்னிருத்திக்கொண்டே இருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.