இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் -முழு விபரம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் 84% வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரத்தில் உள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்பட்டன. இதில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44, 924 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இதே போல், நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளர் நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ரூபி மனோகரனை விட 33 ஆயிரத்து 445 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வாகை சூடினார். இரண்டு தொகுதி வெற்றியை அடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version