விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குபட்ட பகுதிகளில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செஞ்சி ஒன்றியத்துக்குபட்ட பரதன்தாங்கல், ஆலம்பூண்டி, தடாகம், நாகலாம்பட்டு, மழவந்தாங்கல், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம், சத்தியமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து அமைச்சர் சி.வி. சண்முகம் பிரசாரம் செய்தார்.
அப்போது, பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும், அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.