கூட்டணி கட்சி தலைவர்களுடன் நடந்த அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம்

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சென்னை கிளாம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் எஸ். ராமசாமி, புரட்சி பாரத தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version