புதுக்கோட்டையில் அதிமுக வேலைவாய்ப்பு முகாம்: 1,850 பேருக்கு பணி ஆணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்து 850 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையில் படித்த பட்டதாரி ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வேலை வாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாணவர்களின் சான்றிதழ்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு படிப்பிற்கேற்ற வேலை வழங்கப்பட்டது. மொத்தமாக ஆயிரத்து 850 பேருக்கு பணி ஆனை வழங்கப்பட்டது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்

Exit mobile version