ஊரக உள்ளாட்சி தேர்தல் : அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,

அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கான கூட்டணிப் பகிர்வு பேச்சுவார்த்தையில், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 16 மாவட்ட கவுன்சிலர்கள், 156 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் இடங்கள், வெற்றி வாய்ப்புகள் குறித்து இருகட்சி நிர்வாகிகளும் ஆலோசித்தனர்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், மக்கள் விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என கூறினார்.

Exit mobile version