அதிமுக-பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும்

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தரவுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு பணிகளை பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார், ஆனால் காங்கிரஸ் கட்சியால் கூட அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று விமர்சித்தார். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் முரளிதரராவ் கூறினார்

Exit mobile version