20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரியகுளம் தொகுதிக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், என். முருகுமாறன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பூர்- இ.மதுசூதனன் கழக அவை தலைவர், டி.ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், உள்ளிட்ட 10 பேர் நியமினம்
ஆம்பூர் தொகுதிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வணிக வரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி , தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபீல் உள்ளிட்ட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் . வைத்திலிங்கம் எம்.பி, இரா. துரைக்கண்ணு வேளாண் அமைச்சர், எஸ்.வளர்மதி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரூர் தொகுதிக்கு அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உள்ளிட்ட 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்ட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிலக்கோட்டை தொகுதிக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரை தொகுதிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் தொகுதிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் நியமினம்
விளாத்திக்குளம் தொகுதிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் உள்ளிட்ட 6 பேர் நியமினம் செய்யப்பட்டுள்ளனர்
திருப்போரூர் தொகுதிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் , தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் பா. வளர்மதி, மரகதம் குமரவேல் எம்.பி உள்ளிட்ட 9 பேர் நியமினம்
சாத்தூர் தொகுதிக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேர் நியமனம்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 7 பேர் நியமனம்.
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்ட 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சோளிங்கர் தொகுதிக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத், விளையாட்டுத்துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 5 பேர் நியமனம்
திருவாரூர் தொகுதிக்கு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்ட 3 பேர் நியமனம்
பரமக்குடிக்கு, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் நியமனம்
ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம் ராஜலெட்சுமி உள்ளிட்ட 5 பேர் நியமனம்
பூந்தமல்லி தொகுதிக்கு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியில் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் உள்ளிட்ட 10 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.