கடந்த பகுதியில் புரட்சித் தலைவர் தமிழ்மொழிக்கு செய்த சிறப்புகள் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழ்மொழிக்கு செய்த சிறப்புகள் பற்றிக் காண்போம்.
புரட்சித் தலைவி :
புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஒரு தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர் ஆவார். ஆனால் புரட்சித் தலைவியை அன்றைய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்மொழியின் எதிரி என்று விமர்சித்தார். ஆனால் புரட்சித் தலைவி அவர்கள் அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தன்னுடைய மக்கள் பணியை செவ்வெனே செய்து பேசிய ஒவ்வொருவரின் வாயையும் அடைத்தார். தமிழ்மொழியின் எதிரி என்றவர் கதறி சிதறி ஓடிப்போகும் அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டுவந்த துறை என்பதற்காகவே தமிழ்வளர்ச்சித் துறையை பெரிதாக மேற்பார்வையிடாத திமுகவின் அழிசாட்டியத்திற்கு அழிவைக் கொடுத்து பதவியில் அமர்ந்ததும் தமிழ்வளர்ச்சித் துறையை வளர்த்தெடுத்தார் புரட்சித் தலைவி. தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சு,கட்டுரை,கவிதை ஆகியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பத்தாயிரம்,ஏழாயிரம்,ஐந்தாயிரம் என்று பரிசுத் தொகையினை அறிவித்து மாணவர்களிடையே கற்றல் மற்றும் மொழித்திறனை ஊக்குவித்தார்.
புரட்சித் தலைவி ஐந்துமொழிகள் அறிவார். தமிழில்தான் செயல் புரிவார். தமிழின் புனிதமான வார்த்தையான அம்மா என்கிறப் பெயரை தமிழக மக்கள் அவருக்கு சூட்டிப் பெருமைப்பட்டார்கள். சிங்கத்தின் குகைக்கு சென்று அதன் பிடரியைப் பிடித்து இழுப்பது போல தன் சொந்த மாவட்டமான மைசூருக்கு சென்று நான் ஒரு தமிழச்சி என்று கர்ஜித்தவர் புரட்சித் தலைவி அவர்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நகர்ப்புற சுகாதாரம், வெளிநாட்டு முதலீடு, கலை கலாச்சார பாதுகாப்பு இப்படி பல்துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகியாக, முதலமைச்சராக தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்திருக்கிறார் புரட்சித் தலைவி. தமிழ்நாட்டிற்காக எண்ணற்றத் திட்டங்களையும் கொண்டுவந்துள்ளார். முக்கியமாக ஏழை எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் கொண்டுவந்தார். உண்மையில் ஒரு குழந்தையின் பசி தாய்க்குத்தான் தெரியும். இப்படி பலத் திட்டங்களை சொல்லி மாளாது. ஜெ. ஜெயலலிதா எனும் நான் என்று கோட்டையில் கர்ஜிக்கும்போது புல்லரித்து பூகம்பமே ஏற்படும் அளவிற்கான ஆளுமை நமது புரட்சித் தலைவி.
தொடரும்…
பகுதி ஒன்று – https://newsj.tv/aiadmk-and-tamil-language-part-1/
பகுதி மூன்று – https://newsj.tv/aiadmk-and-tamil-language-part-3/