அஇஅதிமுக என்கிற மாபெரும் கழகமும் தமிழ்மொழியும்..! (பகுதி ஒன்று)

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று திரைப்பட பாடலுக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அந்த மூன்றெழுத்து கடமை என்று அப்பாடல் வழி கருத்தினை பாமர மக்களுக்கு கடத்தியிருப்பார். அஇஅதிமுக கழகத்தினைப் பொறுத்தவரை மூன்றெழுத்தில்தான் அதன் அஸ்திவாரமே தொடங்கியது. அந்த மூன்றெழுத்து எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் தலைவர் ஆவார். பிறகு அந்த அஸ்திவாரத்தை தாங்கிப் பிடித்து வழிநடத்திக் கூட்டிச்சென்றது புரட்சித் தலைவி அம்மா எனும் மூன்றெழுத்து மந்திரமாகும். இந்த இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இயங்கிக்கொண்டிருக்கும் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை ஈன்றெடுத்த மண்ணான சேலம் கூட மூன்றெழுத்துதான். இப்படி அஇஅதிமுகவிற்கும் மூன்றெழுத்திற்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அப்படிப்பட்ட மாபெரும் கழகம் தமிழ் எனும் மூன்றெழுத்திற்காக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்று இக்கட்டுரையில் காண்போம்.

புரட்சித் தலைவர் :

அதிமுக கழகத்தின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த பற்றினைக் கொண்டவர். 1974 பிப்ரவரியில் பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. மாஹி எனும் பகுதில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர் அவர்களை அங்குள்ள மலையாள மொழிப்பேசும் மக்கள் எங்களுக்காக மலையாளத்தில் பேசுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் புரட்சித் தலைவரோ ”எனக்கு தமிழ்மொழி நன்றாகத் தெரியும். சிறுவயதில் நாடக மேடைகளில் தமிழில் நடித்து பேசுவதை கற்றுக்கொண்டேன். வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். என்னை அரவணைத்து வளர்த்தெடுத்தது தமிழ்நாடுதான். எனவே தமிழில்தான் பேசுவேன். விருப்பம் இல்லாதவர்கள் சென்றுவிடலாம்” என்று கூறினார். இதில் சிறப்பு என்னவென்றால் அன்றைய தேர்தலில் பாண்டிச்சேரி சட்டப்பேரவையில் 30 தொகுதிகளில் 12 தொகுதிகளில் அதிமுக தனிப்பெரும்பான்மையாக வென்றது. மற்றக்கட்சிகள் சொற்பங்களில் வீழ்ந்தன.

அதேபோல தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் நீண்ட நாட்களாக தமிழ் மொழிக்கு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதனை நிறைவேற்றி வைத்து தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகத்தினை 1981ல் நிறுவினார் புரட்சித் தலைவர். இப்பல்கலைக்கழத்தினை செப்.15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று திறந்துவைத்தார். இந்தப் பல்கலைக்கழத்தின் கட்டமைப்பு தமிழ்நாடு என்கிறப் பெயரைத் தாங்கி நிற்கிறது. இதனை பறக்கும் ட்ரோன் கேமிராக்கல் மூலம் காணலாம்.

மதுரையில் 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக்காட்டியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்ச் சங்கத்தினையும் மதுரையில் நிறுவினார். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் தலைநகரான மதுரையில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த உலகத் தமிழ்ச்சங்கம் காலத்தால் அழியாதது. மேலும் தமிழுக்கான வளர்ச்சித்துறை ஒன்று வேண்டும் என்று கருதிய புரட்சித்தலைவர் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையை 1987 அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

தொடரும்…

பகுதி இரண்டு – https://newsj.tv/aiadmk-and-tamil-language-part-2/

பகுதி மூன்று – https://newsj.tv/aiadmk-and-tamil-language-part-3/

Exit mobile version