அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு !

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக – பாஜக இடையேயான தொகுதி பங்கீடு சுமுகமாக நிறைவுபெற்றது. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-விற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version