அனைத்து தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என உறுதி: பிரேமலதா விஜயகாந்த்

40 நாடாளுமன்ற தொகுதி மட்டுமல்லாமல் 18 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆலம்பட்டி புதூரில் அதிமுக கூட்டணியின் தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டணி என கூறினார்.

இந்த கூட்டணியை தடுக்க தி.மு.க பல்வேறு சூழ்ச்சிகைளை செய்ததாக குறிப்பிட்ட அவர், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறுவது மட்டுமின்றி 18 சட்டமன்ற இடைதேர்தலிலும் வெற்றி பெற்று, இந்த ஆட்சியும் கூட்டணியும் தொடரும் என்று கூறினார்.

பிரசாரத்தின் போது, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உட்பட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version