வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வது உறுதி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பெற்றுவது 100 சதவீதம் உறுதி என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோஃபர் கஃபீல் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விலகி அமைச்சர் நீலோஃபர் கஃபீல் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது, புதியதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் கட்சி துண்டுகளை அணிவித்து, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நீலோஃபர் கபில் திமுகவினர் செய்த தில்லுமுல்லுவால் தான், வேலூர் மக்களவைத்தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் 100 சதவீதம் வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.

Exit mobile version